கபசுர குடிநீர்


கபசுர குடிநீர் பவுடர்



கபசுர குடிநீர் பவுடர்


சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக் சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய 15 மூலிகை
 

நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரணத்தை இரண்டு தேக்கரண்டி (10 கிராம்) வீதம் எடுத்துக்கொண்டு 200 மி.லி. அளவு தண்ணீரில் இந்த குடிநீர் சூரணத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காக வரும் வரை காய்ச்சி வடிகட்டி கசாயத்தை எடுத்துக்கொள்ளவும். 1 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5 மி.லி., 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மி.லி., 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 50 மி.லி. மட்டும் கொடுக்கவேண்டும். 

தற்காப்புக்காக 3 முதல் 5 நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2 வேளை முதல் 3 வேளை வரை பருகலாம். நோய் வந்த பின்னர் டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும். வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. ஏதேனும் நோய் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி உணவு உண்ணுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அருந்தலாம்.

யார் குடிக்கக்கூடாது?

குடிநீரை அப்போதைக்கு அப்போது மட்டும் புதிதாக செய்து பயன்படுத்தவேண்டும். குடிநீரை 3 மணி நேரத்துக்கு பின் பயன்படுத்தக்கூடாது. 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் முதல் 3 மாதங்களுக்கு குடிக்காமல் இருப்பது நல்லது. வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது.  
 

Available Wholesale and retails and Export also:

K. Rahamathullah
Maarslla Export and Import
No.8/1 1st Main Road, Anna Nagar East,
 Chennai - 600102,Tamilnadu, India.
Phone : 044 - 26205002, Mobail : 9884599988.
Face Book: spirulina stevias
Web: maarsllatrade.in, Mail: maarslla@gmail.com.






Comments